தமிழில் 15 கர்மா மேற்கோள்கள்

கர்மா என்ற தலைப்பில் சத்குருவின் 20 மேற்கோள்கள் தவறான எண்ணங்களை அகற்றி அதன் அர்த்தத்தை தெளிவுபடுத்தும்.

Karma Qutoes in Tamil

பக்தி, கர்மவினையை அழித்து முக்திக்கு வழிவகுக்கிறது.

புதிதாக மீண்டும் மீண்டும் கர்மப்பதிவுகளின் பசையை சேர்த்துக்கொண்டே சென்றால்தான், பழைய கர்மப்பதிவுகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளும். 

கர்மவினை என்பது குறிப்பிட்ட சில சுபாவங்கள் மூலம் இயங்குகிறது. ஆனால் சற்று விழிப்புணர்வும் கவனமும் கொண்டு, அதனை உங்களால் திசைமாற்ற முடியும்

கர்மா என்பது டேப் ரிக்கார்டரிலிருந்து மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகும் பழைய ஒலிப்பதிவுகள் போன்றது. யோகா என்றால் வாழ்க்கை திரும்ப ஒலிபரப்பாவது மட்டுமல்ல, ஒரு ஆழமான சாத்தியம் மற்றும் அனுபவமாகவும் கூட ஆவது.

நீங்கள் பொருள்நிலையில் எவ்விதமான செயல் செய்தாலும் – அதை நீங்கள் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்தால், நீங்கள் ஒரு கர்மயோகி.

கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்குகிறீர்கள். கர்மவினையின் குவியல் வரமாகவும் இருக்கலாம், பாரமாகவும் இருக்கலாம் – தேர்வு உங்களிடத்தில்.

நீங்கள் என்ன செய்தாலும் இதை கவனியுங்கள் – அது உங்களைப் பற்றியது மட்டும்தானா, அல்லது அனைவர் நல்வாழ்வுக்குமானதா. நல்ல கர்மவினையா கெட்ட கர்மவினையா என்ற குழப்பத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.

கர்மா உங்களை உயிர்வாழ வைக்கிறது, அதுவே உங்களை கட்டுண்டு கிடக்கவும் செய்கிறது. நீங்கள் சரியாகக் கையாண்டால், கர்மா உங்கள் முக்திக்கும் வழியாகிவிடுகிறது.

கர்மா என்றால் உச்சபட்ச பொறுப்பு. உங்கள் மரபுவழிப் பண்புகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் உடல், மனம், உணர்வு, சக்தி நிலைகளில் ஏதோவொன்றை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒருவித நினைவை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது. இதனையே கர்மா என்கிறோம்.

கர்மா என்பது செயல் மற்றும் ஞாபகங்களைக் குறிக்கிறது. செயலின்றி ஞாபகங்கள் இல்லை, ஞாபகங்கள் இன்றி செயலில்லை.

கர்மவினை என்பது உங்கள் செயலில் இல்லை – உங்கள் நோக்கத்தில்தான் உள்ளது. வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, என்ன நோக்கத்தில் செய்கிறீர்கள் என்பதுதான் கர்மவினையை உண்டாக்குகிறது.

அனைத்து கர்ம வினைகளிலும், செய்வினை சக்திகளை சுய நலத்திற்காகவோ அல்லது பிறருக்கு கேடு விளைவிக்கவோ பயன்படுத்துவதுதான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விழிப்புணர்வான செயல் கர்மப்பதிவுகளை உருவாக்காது, எதிர்செயல் கர்மத்தை உருவாக்கும்.

கர்மா என்றால் உச்சபட்ச பொறுப்பு. உங்கள் மரபுவழிப் பண்புகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top